Monday, 4 March 2013

மீட்டுகொடு...


நேர் கண்டும் மௌனம் அணியும்
நின் ஊமைச்சொற்கள் புதைமணல்
சிக்கி புரளும் உயிர் மீட்கும்
நின் கிளர்ச்சி பார்வை அரிது
இருத்தல் காண வெறுமைப்பசியில்
திணறி தவிக்கும் சுவாசம்
அமிர்த நச்சை உள்ளுட்டும்
என் இதயநோயடா நீ !!!