Sunday, 5 May 2013

யாசிப்பு




சேய் பிரசவிக்கும் உன்மத்தம்
இதயம் வற்றும் கண்கள் அல்ல
உளமை அறிவுக்கு எட்டும்
எனினும் உடன்படாது மனம்
கதைக்க கோடி விடயம் இருந்தும்
நேரில் மாவஞ்சம் செய்யும் நா
உன் மௌன வன்மை கண்டும்
பலவந்தமாய் உயிர் பிழைக்கின்றேன் 
நெஞ்சா ங்கூட்டின் பனிப்புடன்
என்றும் காத்திருப்பில் நான்...

No comments:

Post a Comment